நெல்லை, பாளையங்கோட்டை உத்திரபசுபதி நயினார் தெருவை சேர்ந்தவர் விஜயா நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ' எனது கணவர் முத்துசாமி திருநெல்வேலி மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றிய நிலையில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி இறந்தார். திருநெல்வேலி மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் எனது கணவர் உறுப்பினராக இருந்தார். அந்தவகையில், அந்த கூட்டுறவு சங்கத்தில் பணத்தை சேமித்து வைத்துள்ளளார். முத்துசாமி இறந்த பிறகு அவரது வாரிசான நான் அந்த பணத்தை பெற மூன்று முறை மனு அளித்தும் தர மறுக்கின்றனர். இது குறித்து, கேட்டால் . எனது கணவர் இறந்த தேதிக்கு பிறகு, கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் வந்து பணத்தை எடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே, சட்ட நடவடிக்கை எடுத்து எனது கணவர் சேமித்த பணத்தை என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். '
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.










