நெல்லை : கிரைண்டர் ஆப்பால் இளைஞருக்கு ஆப்பு : தண்ணீர் குடம் காணாமல் போனதால் மற்றொருவருக்கு கத்திகுத்து

attack-on-younster-in-nellai

கிரைண்டர் ஆப் வழியாக ஆசை காட்டி, நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் வாலிபரிடத்தில் நகைகள் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே கொங்கந்தான்பாறை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துசெல்வம் என்பவரின் மகன் சுபின்(25). இவர் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு 9 மணிக்கு வேலை முடிந்து இவர் பைக்கில் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது , பைபாஸ் சாலையின் இருட்டான பகுதியில் இவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் , ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என்று சுபின் கூறியுள்ளார்.

இதையடுத்து,அவரை தாக்கிய கும்பல், அவரிடம் இருந்து செல்போன், ஒரு மோதிரம், ஒரு தங்க செயின், வெள்ளி செயின் மற்றும் இரு ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். காயம் அடைந்த சுபின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரைண்டர் ஆப் வழியாக பேசி சுபினை சம்பவ இடத்துக்கு மர்மகும்பல் வரவழைத்தாக கூறப்படுகிறது.

காணாமல் போன தண்ணீர் குடம் ; பெயிண்டருக்கு கத்திக்குத்து

நெல்லை, மேலப்பாளையம் கொக்கட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் ( 34). பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பால்பாண்டி ( 30) என்பவரது வீட்டில் இருந்த தண்ணீர் குடம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பால்பாண்டி, அருள்தாஸிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பால்பாண்டி கத்தியால் அருள்தாஸை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருள்தாஸ், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி, பால்பாண்டியை நேற்று கைது செய்தனர்.

READ MORE ABOUT :