கோவையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: திருநெல்வேலியில் பா.ஜ.க போராட்டம்

young-woman-sexually-assaulted-in-coimbatore-bjp-protests-in-tirunelveli

கோவையில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலில் வன்கொடுமையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவையில் இளம்பெண் மூன்று கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் வண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

குறிப்பாக முன்னாள் நெல்லை மாநகர மேயரும், தற்போதைய பாஜக நிர்வாகியுமான புவனேஸ்வரி, கருப்பு சேலையுடன் உடலில் இரும்பு சங்கிலி பூட்டி கையில் திரிசூலம் ஏந்தி நூதன முறையில் அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்