நெல்லையில் கன்னியாகுமரி பா.ஜ.க நெசவாளர் பிரிவு அறிமுக கூட்டம்

kanyakumari-bjp-weavers-unit-meeting-in-nellai

கன்னியாகுமரி கோட்ட பா.ஜ.க நெசவாளர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடந்தது.

கூட்டத்துக்கு மாநில செயலாளர் கே.எஸ்.முருகப்பா தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் குமரன் வரவேற்றார். கூட்டத்தில் , நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தென்காசி பா.ஜ.க மாவட்ட நெசவாளர் பிரிவு நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணைத்தலைவர்கள், செயலாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நெசவாளர் பிரிவு அமைப்பாளர் அண்ணாத்துரை, பா.ஜ.,க வடக்கு மாவட்ட தலைவர் முத்துப்பலவேசம், நாகர்கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி ஆகியேர் நிகழ்சசியில் பேசினர். நெசவாளர் பிரிவு செயல்படவேண்டிய விதம், எப்படி தேர்தல் பணியாற்றவேண்டும் என்பது குறித்து குமரி மாவட்ட கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன்ஜி ஆலோசனைகள் வழங்கினார். நிறைவாக நெல்லை வடக்கு மாவட்ட நெசவாளர் பிரிவு துணைத்தலைவர் சுப்புபழனிக்குமார் நன்றி கூறினார்.

READ MORE ABOUT :