நெல்லையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரானை, மற்றொரு வழக்கில் ஜாமீனில் வெளிவந்தபோது, கடலூர் மத்திய சிறை வாசலிலேயே நெல்லை தனிப்படை போலீஸார்கைது செய்தனர். தொடர்ந்து, நெல்லைக்கு அவரை வாகனத்தில் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
ஆனால், கண்ணபிரானை ஏற்றி சென்ற நெல்லை போலீசாரின் வாகனங்களை பின் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வந்தனர். இதனால், மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நெல்லை போலீசார், விருதாச்சலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் குண்டு வீசிய வழக்கில் கண்ணபிரான் தற்போது, கைது செய்யப்பட்டுள்ளார்.








