தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா கோவிலில் 500 கிலோ ஆட்டுக்கறியுடன் அசன விருந்து

asana-feast-with-500-kg-of-mutton-in-paniya-matha-church-in-south-kallikulam

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வருகை தருவார்கள். இங்கு. ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையில் அசனம் நடைபெறும். இதையொட்டி, பாரம்பரிய முறைப்படி சமையல் கலைஞர்களை கொண்டு ஆட்டுகறி விருந்து வழங்கப்படும்.


இந்த ஆண்டு 500 கிலோ ஆட்டு இறைச்சி , ஒன்றரை டன் அரிசி, இரண்டு டன் காய்கறிகள் கொண்டு சமையல் செய்யப்பட்டது. பின்னர், பங்குத்தந்தை ததேயூஸ் ராஜன் அடிகளார் ஜெபிக்க, கோவில் நிர்வாகி மரியராஜ் ஆசிரியர் அசன விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஏராளமாக மக்கள் பாத்திரங்களில் தங்களது வீடுகளுக்கு சாதம்,, ஆட்டுகறி குழம்பு, குடல் பொரியல் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். இந்த அசனவிருந்து கிராம மக்கள் நலனுக்காக தொன்று தொட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.