திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில் சுஜிதா என்ற பெண்தனது இரண்டு மகன்களோடு வசிக்கிறார். இதில், ஒரு மகன் மாற்றுத்திறனாளி ஆவார். நேற்றிரவு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தனது மகன்களை கூச்சல் போட்டு எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, சிறுத்தை தாக்க வந்த போது பிளாஸ்டிக் கூடையை கொண்டு பதிலடி கொடுத்தார். இதனால், சிறுத்தை சமையல் அறையில் சென்று புகுந்து கொண்டது. இந்த சமயத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து உயிர் தப்பினர். சிறுத்தை தாக்கியதில் தலை, கை, கால்கள் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சுஜிதா
வீடுகளை பாதுகாப்பான முறையில் கட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அனுமதி கேட்டும், அனுமதி கிடைக்கவில்லை. இதனால், சிறுத்தை புகுந்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சுஜிதா தெரிவித்துள்ளார்









