சந்திப்பு வரதராஜ கோயிலுக்கு பாத்தியப் பட்ட 2 கோடி ரூபாய் சொத்து மீட்பு!அறநிலைத்துறையினர் அதிரடி

nellai-junction-varadaraja-temple-property-worth-rs-2-crores-recovered

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 5 கடைகளின் வாடகைதாரர்கள் பல வருடங்களாக வாடகை செலுத்தவில்லை . இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (நவ.14) இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் அதிகாரிகள் அந்த கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர். இந்த கடைகளின் மொத்த மதிப்பு 2 கோடி ஆகும் .

கோயில் செயல் அலுவலர் தங்க சுதா, சரக ஆய்வாளர் பரமசிவன்,அறநிலையத்துறை தாசில்தார்,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், உட்பட பலர் முன்னிலையில் இந்த சொத்து மீட்கப்பப்பட்டது. அசம்பாவித சம்பவம் நடைபெறாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.