உலக சர்க்கரை நோய் தினத்தைமுன்னிட்டு, திருநெல்வேலியில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக, மருத்துவமனை வளாகத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான உணவு மற்றும் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் . அருணாசலம் முன்னிலையில் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியில் அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஸ்வர்ணலதா அருணாசலம் , மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
சிறப்பம்சமாக, அருணா கார்டியாக் மருத்துவமனை தலைவர் டாக்டர். அருணாசலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பரமபதம் விளையாட்டைத் (Snakes and Ladders) தொடங்கி வைத்து, விளையாடினார்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் "நீரிழிவு பாத பராமரிப்பு" (Diabetic Foot Care) குறித்த சிறப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏற்படும் புண்கள், இரத்த ஓட்டக் குறைபாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. நோயாளிகள் தங்கள் கால்களைத் தினசரி தவறாமல் பராமரிக்க வேண்டும் என்றும், சிறு காயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனையின் சிறப்பு நீரிழிவு பராமரிப்பு மையத்தில் இலவச ரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் பாத பராமரிப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆலோசனை, விளையாட்டுகள் , வினாடி வினா போட்டி, மற்றும் ஆரோக்கியமான உணவு வழிகாட்டல் குறித்த கண்காட்சி ஆகியவையும் நடத்தப்பட்டன.
''சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வணத அனைவருக்கும் சாத்தியமே என மக்களிடம் உணர்த்துவதே எங்கள் நோக்கம்," என நிர்வாக இயக்குனர் டாக்டர். ஸ்வர்ணலதா அருணாசலம் தெரிவித்தார்.







