நயினார் தொகுதி :பெயரை உண்மையாக்கிய நயினார்குளம் சாலை

small-bond-in-nainarkulam-road-in-nellai

கடந்த சில நாட்களாக நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, குண்டும் குழியுமான சாலையில் இப்போது, மழைநீர் தேங்கி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி நயினார்குளம் சாலை பகுதியில் சாலையின் நடுவே பெரிய குளம் போன்ற பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது மட்டுமல்ல, இந்த சாலையின் பல பகுதிகளில் சிறிதும், பெரிதுமாக ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இதனால், இந்த சாலையில் வாகனங்களை இயக்க தனி பயிற்சியே வேண்டும். இல்லையென்றால், கீழே விழுந்து எழுந்துதான் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இப்போது, சாலைக்கு நடுவே பெரிய குளமும் உருவாகியிருக்கிறது.

இதனால், நயினார் குளம் சாலை தனது பெயரை உறுதிபடுத்துவதாக , நெட்டிசன்கள் கேலியாக கூறி வருகின்றனர். இந்த சாலை மட்டுமல்ல, நெல்லையின் பல சாலைகளின் நிலை இதுதான். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் தொகுதி இதுவென்பது கூடுதல் தகவல்.

READ MORE ABOUT :