காரையாறில் சங்கிலி அலங்காரத்தில் சங்கிலி பூதத்தாரும் ராஜதர்பார் அலங்காரத்தில் மொட்டையன் சுவாமியும் காட்சியளிக்க கேரளா உணவு வகை படையல் வைத்து வழிபாடு நடநதது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.தாமிரபரணி நதிக்கரையில் பாறை மேல் அமைந்துள்ள இத்திருக்கோவில், சாஸ்தாவின் முதல் கோயிலாக கருதப்படுகிறது. இங்கு ,சுவாமி சொரிமுத்து அய்யனார் பூரணா புஷ்கலை தேவிகளுடன் அருள்பாலிக்கிறார். மேலும், சங்கிலி பூதத்தார் சுவாமி மற்றும் மொட்டையன் சுவாமி ஆகியோர் சிறு தெய்வங்களாக இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

ஐப்பசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நேற்று சங்கிலி பூதத்தார் மற்றும் மொட்டையன் சாமிக்கு கேரளா உணவுகள் படைக்கப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மதியம் தொடங்கி நடைபெற்ற அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றினர். அப்போது, பக்தர்கள் சங்கிலியால் தங்களை அடித்துக் கொள்ளும் நேர்ச்சையும் நடந்தது.
மேலவாசல் பூதத்தார் மாதாந்திர பூஜைக் குழுவினரின் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.








