இலங்கைக்கு தென்கிழக்கே நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்து 72 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பதிவாகி வருகிறது,. இந்நிலையில் காற்று சுழற்சியானது படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை முதல் மழை அதிகரிக்க துவங்கும்,
அதற்கு அடுத்து 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழையும் . ஆங்காங்கே பல பகுதிகளில் கனமழையும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஆங்காங்கே கனமழையும் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு, படிப்படியாக நாளை மறுதினம் முதல் மற்ற தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்க துவங்கி அதற்கு அடுத்து 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஆங்காங்கே கனமழையும் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








