முக்கூடல் : குடியிருப்பு அருகே மலைபாம்பு நடமாட்டம்

python-roaming-near-residence-in-mukkudal

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிறிஸ்துவ கல்லறை தோட்டப் பகுதியில் முக்கூடல்- ஆலங்குளம் ரோட்டில் மலைப்பாம்பு ஒன்று நேற்றிரவு ஊர்ந்து சென்றுள்ளது. இந்த மலைபாம்பு சுமார் 10 அடிக்கு மேல் நீளமாக இருந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து வெளியிட, அது வைரலானது.

மலைபாம்பு நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆடு, மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட முடியாமல் தவிக்கின்றனர். வனத்துறையினர் இந்த மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வன பகுதியில் விட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :