லட்சங்களில் குளிக்கும் திருநெல்வேலி தீயணைப்புத் துறை அலுவலகம் : சிக்கிய துணை இயக்குநர் சரவணபாபு

anti-corruption-bureau-raids-tirunelveli-fire-department-office


திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இயங்கி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மண்டல உதவி இயக்குநர் (துணை இயக்குநர்) அலுவலகத்தில் இன்று (நவ. 18) லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மதியம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போதே அலுவலகத்தில் கணக்கில் வராத பெருந்தொகை சிக்கியது. இதில், நான்கு கவர்களில் மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல்இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாகச் மூன்று லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில் மேலும் அதிகப் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், சோதனை தீவிரமாகத் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.