வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் , நெல்லையில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

onion-prices-rises-in-nellai

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், நெல்லையில் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனையாகிறது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. வரத்துக் குறைவினால் நெல்லையில், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ நூறு ரூபாயைத் தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து சீரானால் தான் விலை குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தரமான பெரிய வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்படும் நிலையில், மற்ற ரகங்களின் விலை சற்று குறைவாகவே உள்ளது.தரம்குறைந்த சிறிய ரக வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 ஆக உள்ளது.பல்லாரியின் விலை ஒரு கிலோ ரூ.30 ஆக உள்ளது.

இதற்கிடையே, மழைக்காலங்களில் அதிகளவில் விளையும் சீனிக்கிழங்கு மற்றும் கப்பக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு) ஆகியவற்றின் விலை சந்தையில் மிகவும் குறைவாக உள்ளது. மைசூர் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த கிழங்குகள் ஒரு கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

மற்ற காய்கறிகளின் விலையும் மழை காரணமாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் குறைவான விலையில் கிடைக்கும் சீனிக்கிழங்கு மற்றும் மரவள்ளிக் கிழங்குகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். முருங்கைக்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், தக்காளி கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கும் 60, அவரைக்காய் 80 ரூபாய்க்கும் 80, பட்டர் பீன்ஸ் 200 ரூபாய்க்கும், மிளகாய் கிலோ 60 ரூபாய்க்கும்மலை , கொத்தமல்லி 80 ரூபாயை தொட்டது. புடலங்காய் 22 ரூபாய்க்கும் மலை காய்கறிகள் சௌசௌ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது

READ MORE ABOUT :