உத்தரபிரதேச சாரணர் இயக்க முகாமில் பங்கேற்கும் நெல்லை மாணவர்கள் வழி அனுப்பிவைப்பு

tirunelveli-scouts-students-went-to-uttar-pradesh-to-participate-camp

உத்திரபிரதேச பிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச சாரணிய சாரணியர் அமைப்பின் ஜாம்புரி முகாம் நவம்பர் 23 முதல் 29 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து நாடுகளைச் சேர்ந்த சாரண சாரணிய இயக்கத்தினர் முகாமில் கலந்து கொள்கிறார்கள். இந்த முகாமில் கலந்து கொள்ளும் திருநெல்வேலி சாரண இயக்க மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு வழியனுப்பி வைத்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளி , சங்கரி மெட்ரிக் பள்ளி சாரண மாணவர்கள் 22 பேர் நேற்று இரவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் மூன்று ஆசிரியர்கள் உடன் சென்றனர். கடந்த ஜனவரி மாதம் ஜாம்பூரி முகாமை தமிழ்நாடு அரசு திருச்சிக்கு அருகே மணப்பாறையில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை மட்டுமின்றி பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு இந்த முகாமில் கிடைக்கும். இது, மாணவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

READ MORE ABOUT :