வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு : வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரரேசனுக்கு பிடிவாரண்ட்

valliyur-court-orders-arrest-warrant-issued-for-mayiladuthurai-dsp-sundararesan

கடந்த 2006ம் ஆண்டு நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போன வழக்கில் செயல் அலுவலர் உச்சிமகாளி அளித்த புகாரின் அடிப்படையில் 6பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வேறு ஒரு வழக்கில் 2011ம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினார். இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக, க பலமுறை சம்மன் அனுப்பியும் தற்போதைய டி எஸ்பி ஆக இருந்து வரும் சுந்தரேசன் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டென்சிங் டி.எஸ்.பி . சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். முன்னதாக, சில மாதங்களுக்கு முன்பு, டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்திய அரசு வாகனம் மாவட்ட காவல்துறையால் திரும்ப பெறப்பட்டது. இதனால் , டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்த வீடியோ, வைரலானது. உயர் அதிகாரிகள் மீதும் இவர் , பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது..