தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் அதிகாரி ஜெயமணியை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

protest-against-thoothukudi-nazareth-thirumandala-election-officer-jayamani

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தர் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!” “நீதியரசருக்கு இது ஒத்துவருமா?” “வெளியேறு, வெளியேறு… தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை விட்டு வெளியேறு!” “தமிழக அரசே! நீதி செய்… நீதி செய்!” என்று வாசகங்கள் இடம்பெற்ற கண்டன பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது . இதனால், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி முன்னாள் தாளாளர் இன்ஸ்டீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி ஒரு அணியின் தலைவராக இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய திருச்சபையின் சட்டங்கள், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சட்டங்கள் அனைத்தையும் காற்றிலே பறக்கவிடுகிறார்.சிறுபான்மையினரின் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். ஒவ்வொரு மதத்திற்கும் சில சட்டங்கள் உள்ளன. எங்களுடைய கிறிஸ்துவ தென்னிந்திய திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல் நடக்க வேண்டும் . நீதிமன்றத்தை தீர்ப்பை நாங்கள் ஏற்றுதான், அவரை தேர்தல் அதிகாரியாக பொறுப்பு ஏற்க வைத்தோம். இரண்டு அணிகளுக்கும் அவர் பாரபட்சமில்லாமல் செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால் ஒரு சாராருக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

READ MORE ABOUT :