தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கடைசிய அணையான ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 11,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது தொடர்ந்து பெய்து வருந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான அணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக புண்ணக்காயல் வழியாக கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 15250 கன அடியும் , கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஏரல் தரைப்பாலம் மூழ்கி விட்டது
மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக ஏரல் மற்றும் ஆத்தூர் பாலத்திற்கு அருகிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.










