தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதி விபத்து 6 பேர் பரிதாபப் பலி

private-buses-collide-in-tenkasi-6-people-dies

தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே துரைசாமி புரத்தில் தனியார் பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராக மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் கை,கால், தலை என அனைத்தும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்களும் இங்கேதான் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில், எம்.ஆர். கோபாலன், கே.எஸ்.ஆர் தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டுள்ளன. ஒரு பேருந்து தென்காசியில் இருந்து ராஜாபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. மற்றொரு பேருந்து , தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது.

READ MORE ABOUT :