தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 ரூபாய் நாணயங்களை கொண்டு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம்பெல்லிடம் 2ம் வகுப்பு மாணவன் ஒருவன் வாழ்த்து பெற்றான்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் ஜான். இவரது மனைவி சந்திரிகா. இத்தம்பதியினர் மகன் ஆன்றோ ஜெபஸ் ரிஜோ, வடக்கன்குளம் எஸ்ஏவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறான். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ( நவ.27)முன்னிட்டு பத்து ரூபாய் ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் மூலம் அவரின் உருவப் படத்தை வரைந்துள்ளான்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் உருவபடத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல்லிடம் நேரில் காண்பித்து வாழ்த்துபெற்றான் . அவருக்கு கிரகாம்பெல் சால்வை அணிவித்து பாராட்டினார்.
பள்ளி மாணவன் ஆன்றோ ஜெபஸ் ரிஜோ கூறுகையில்,' எனக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாமாவை ரொம்ப பிடிக்கும் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு இதனை செய்தேன்' என்று தெரிவித்தான்.









