திருநெல்வேலி மாவட்டம் மானூரில் செயல்பட்டு வரும் தபால் நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் காவல் நிலையத்திற்கு பின்புறம் பழமையான கட்டடத்தில் மானூர் தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டடம் மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து நிற்கும் இந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விடும்நிலையில் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான தபால் நிலையமாகவும் உள்ளது . எனவே, இந்த தபால் நிலையத்தை வேறு கட்டத்துக்கு மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









