நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் ஒரு டீக்கடையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்ததை வருவாய் துறையினர் நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்து.
மேலப்பாளையத்தில் சந்தை ரவுண்டானா பகுதியில் புதிதாக துவக்கப்பட்ட ஒரு டீக்கடையில் விநாயகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது இது குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி தலைமையில் வருவாய் துறையினர் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். டீக்கடையின் உரிமையாளர் கூறுகையில் பரிகாரத்திற்காக விநாயகர் சிலை பூஜைக்கு வைத்துள்ளேன் என்றார். எனினும், வருவாய்துறையினர் அந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர் .
இதனால் , மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் பரபரப்பு காணப்பட்டது .ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.









