விஜயஅச்சம்பாடு : 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரவுடிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

Vijaya-Achambadu-Sexual-harassment-of-a-3-year-old-girl-Rowdy-sentenced-to-20-years-in-prison

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). இவர், சரித்திர பதிவேடு குற்றவாளி . கடந்த 2022-ம் ஆண்டு, அப்பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராமகிருஷ்ணனை கைது செய்தனர். வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ராமகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி திரு. சுரேஷ் குமார் இன்று (02.12.2025) தீர்ப்பளித்தார் . குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகைவழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்ட அப்போதைய துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் (தற்போது விருதுநகர் உட்கோட்டம்), நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற கண்காணிப்பு செய்த வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் காவலர்களையும், திறம்பட வாதாடிய அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 26 போக்சோ வழக்குகளில் 27 குற்றவாளிகளுக்கு தண்டன பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக:
* ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை,
* இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 4 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை,
* ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை,
* 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தனிப்பட்ட கவனத்துடன் செயல்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

READ MORE ABOUT :