கார்த்திகை தீபத் திருநாள்: நெல்லையில் கடைவீதி கல கலக்க விளக்குகள் விற்பனை படு ஜோர்

Karthigai-Deepam-Festival-Nellai-shops-selling-lamps

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத் திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

கார்த்திகை மாதம் என்றாலே வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை பிறக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் கோவில்களையும் அலங்கரிக்கத் தேவையான மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ள மண் விளக்குகளுக்குப் பொதுமக்களிடையே எப்போதும் தனி மவுசு உண்டு. இங்கு விற்பனை செய்யப்படும் விளக்குகள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. விளக்குகளின் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* சாதாரண சிறிய அகல் விளக்குகள் *ரூ.2 முதல் ரூ.20 வரை* விற்பனை செய்யப்படுகிறது.
* சிறப்பு வடிவமான *வாழைப்பூ விளக்கு ரூ.30-க்கு* விற்கப்படுகிறது.
* நீண்ட நேரம் எரியக்கூடிய *அரை லிட்டர் எண்ணெய் பிடிக்கும் விளக்கு ரூ.35-க்கும், **ஒரு லிட்டர் எண்ணெய் பிடிக்கும் பெரிய விளக்கு ரூ.50-க்கும்* விற்பனை செய்யப்படுகிறது.

''மண் விளக்குகளை வீட்டில் ஏற்றினால் ஐஸ்வரியம் பெருகும்'' என்ற நம்பிக்கையில் பொதுமக்கள், முன்பதிவு செய்தும், நேரடியாகக் கடைகளுக்குச் சென்றும் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் .நெல்லை கடைவீதிகளில் கார்த்திகை விற்பனை சூடுபிடித்துள்ளது.