நெல்லை டவுண் நயினார்குளத்தில் படகு சவாரி

boat-service-at-nainarkulam-in-nellai-town

திருநெல்வேலி மக்களின் பொழுதுபோக்கிற்காக டவுண் நயினார் குளத்தில் விரைவில் படகு சவாரி. படகு சவாரி முன்னோட்டதின் ஒரு பகுதியாக மேயர் ராமகிருஷ்ணன் படகில் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. முதற்கட்டமாக படகில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் படகில் பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணம் செய்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, செந்தில், ஸ்ரீதர் உட்பட பலர் இருந்தனர்.

READ MORE ABOUT :