பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் புத்தாண்டு ஆராதனை: பேராயர் பர்ணபாஸ் தலைமையில் நடந்தது

new-year-special-prayer-in-palayamkottai-csi-church

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தூய திரித்துவ சி.எஸ்.ஐ (CSI) பேராலயத்தில் நள்ளிரவு சிறப்புப் புத்தாண்டு ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை திருமண்டலப் பேராயர் பர்ணபாஸ் தலைமையில் இந்தச் சிறப்புப் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது. சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் 2026-ம் ஆண்டு பிறந்தவுடன், தேவாலய மணிகள் முழங்க, சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் பேராயர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஆராதனையின் போது இறைச்செய்தி வழங்கிய பேராயர் பர்ணபாஸ், "இந்த 2026-ம் ஆண்டு மக்கள் அனைவருக்கும் தீமைகளிலிருந்து விடுதலையையும், வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும். நம் தேசத்திலும், மாநிலத்திலும் அமைதி நிலவவும், மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம்" என்று அருளுரை வழங்கினார்.

இந்தச் சிறப்பு ஆராதனையில் கலந்து கொள்வதற்காக பாளையங்கோட்டை மற்றும் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ மககள் தங்கள் குடும்பங்களுடன் திரளாக வருகை தந்தனர். தேவாலய வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. ஆராதனை முடிந்த பின், சபை மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

நெல்லை மாநகரக் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன், எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

READ MORE ABOUT :