திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மரம்வெட்டும் தொழிலாளிக்கு இரு மனைவிகள். முதல் , மனைவி பிரிந்து சென்ற பிறகு மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 15 வயது மகள் ஒரு மகனும் உண்டு.இந்த நிலையில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். சிசுவின் டி.என்.ஏ சோதனையில் தந்தையே மகளை பலாத்காரம் செய்திருப்பது உறுதியானது.

இது தொடர்பான வழக்கு, நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பாளித்தார். தீர்ப்பின் போது, உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது என்று உங்கள் மனைவியும் மகளும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற செயலை மன்னிக்க முடியாததால் ,உங்களுக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என்று நீதிபதி குறிப்பிட்டார். கடந்த 11 நாட்களுக்கு முன்பும், இது போன்று ஒரு குற்றவாளிக்கு இதே நீதிபதி சுரேஷ்குமார் தூக்குத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.








