திருநெல்வேலி கசாலி ஹோட்டலுக்கு சீல் வைப்பு... பின்னணி என்ன?

the-kasali-hotel-in-tirunelveli-has-been-sealed-what-is-the-reason-behind-it

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த பிரபல 'கசாலி' ஹோட்டல், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றதால், அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தெரிவிக்கையில், "இந்த ஹோட்டல் நிர்வாகம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமம் பெற்றுள்ளதாகத் தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக அவர்களிடம் விளக்கம் கேட்டு வந்தோம். ஆனால், அவர்கள் முறையான விளக்கத்தை அளிக்கவில்லை.விசாரணையின் இறுதியில் ஹோட்டல் நிர்வாகம் சமர்ப்பித்த வாடகை ஒப்பந்தப் பத்திரமும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இடத்தின் உண்மையான உரிமையாளர் அளித்த புகாரில், தாங்கள் அத்தகைய வாடகை ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை என்றும், ஹோட்டல் நிர்வாகத்தினர் இடத்தை அபகரித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். போலி ஆவணங்கள் மூலம் உரிமம் பெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த திங்கட்கிழமையே ஹோட்டல் நிர்வாகத்திடம் கடையை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டும் அவர்கள் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று 'கசாலி' ஹோட்டலுக்குச் சென்று அதிரடியாக சீல் வைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

READ MORE ABOUT :