நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரியப்பன் என்பரின் மகன் லெட்சுமணன் (வயது 15). இவர்கள் வீட்டருகே சபரிராஜன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். கடந்த 5ம் தேதி டி.வி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் லெட்சுமணனை தனதுவீட்டுக்கு அழைத்து சென்ற சபரி ராஜன், சராமரியாக அரிவாளால் வெட்டினார்.

பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனிக்காமல் இன்று சிறுவன் இறந்து போனார். இதையடுத்து, இளைஞர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலையில் ஈடுபட்ட போது, மது போதையில் சபரிராஜன் இருந்துள்ளார்.







