கல்லிடைக்குறிச்சியில் திமுக சார்பில் திராவிட பொங்கல் , மினிமாரத்தன் போட்டி

dravidian-pongal-and-a-mini-marathon-competition-organized-by-the-dmk-in-kallidaikurichi


சமத்துவ பொங்கல் தமிழகம் வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் திமுக பேரூர் கழகம் சார்பில் திராவிடப் பொங்கல் மற்றும் மினி மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் திமுக சார்பில் திராவிடப் பொங்கல் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரம்பை பகுதியில் இருந்து தாமிரபரணி இரட்டை பாலம் வரை நடைபெற்ற இந்த மினி மாரத்தானில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சமத்துவம், சமூகநீதி, ஆரோக்கிய வாழ்வு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற அனைவரையும் கட்சி நிர்வாகிகள் பாராட்டினர். நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :