திருநெல்வேலி மாகராட்சி பேட்டை மற்றும் பழைய பேட்டை இணைப்பு சாலையில் சரக்குவாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையை நெல்லை ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா பார்வையிட்டனர்.
திருநெல்வெலி மாநகராட்சி பகுதியிலுள்ள நயினார்குளம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த, மாகராட்சி பேட்டை மற்றும் பழைய பேட்டை இணைப்பு சாலையில் சரக்குவாகன முனையம் மற்றும் விற்பனை சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, விற்பனை இன்று முதல் தொடங்கியது.இங்கு, வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எளிதாக வந்து செல்ல சிறப்பு பேருந்தும் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பு உள்ளிட்ட பொருட்களை இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்முதல் செய்யலாம். இந்த விற்பனை மையத்தை பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர், மக்கள் முறையாக இந்த விற்பனை மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.







