பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் முழு உருவச்சிலைக்கு நிழற்குடை மற்றும் படிக்கட்டுகள் அமைத்திட நெல்லை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவருமான ராபர்ட் புரூஸ் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் டி.பி.எம் மைதீன் கான், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மேயர் ராமகிருஷ்ணன், நெல்லை மேற்கு மாநகர தி.மு.க. பொறுப்பாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணை தலைவர் தியாக சுரேஷ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சசிகுமார், வர்த்தக காங்கிரஸ் ஆபிரகாம் வெஸ்லி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







