பொங்கலை முன்னிட்டு வள்ளியூர் வடக்கு, தெற்கு மற்றும் பணகுடி வள்ளியூர் பேரூர் கழகம் சார்பில் "திராவிடப் பொங்கல் மாரத்தான்" போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் கோட்டையடியிலிருந்து கும்பிளம்பாடு வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஆண்களுக்கு இலக்கும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்டோர் கொடியசைத்து இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரி சரத் முதல் பரிசு பெற்றார். பின்னோக்கி ஓடிய விஜய் உள்ளிட்ட பல வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தார்.







