சிவகளை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்

kanimozhi-mp-inaugurated-the-newly-constructed-overhead-water-tank-in-sivakalai-panchayat

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவகளை ஊராட்சியில் ரூபாய்.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை,

மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று 10.1.26 திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.