நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூரில் திராவிட மாடல் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம் பெல், மாட்டு வண்டியில் வருகை தந்தார். அப்போது, அவருக்கு கராகாட்டம், தப்பாட்டம்,சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற தமிழ் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பளித்தனர்.

பொங்கல் நிகழ்ச்சியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம் பெல் ஆகியோர் சிலம்பம் ஆடி தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மும்மத தலைவர்கள் முன்னிலையில் பொங்கல் வைக்கப்பட்டது.பின்னர், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய தமிழக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.







