நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக , இருந்த ஜெயக்குமார் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் அவர் எரிந்த நிலையில் அவரது வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என தற்போது வரை முடிவுக்கு வராத நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் புதிய மாவட்ட தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. ஜெயக்குமார் மரணம் குறித்த விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விசாரணையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உட்பட பலர் போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீசாரால் விசாரணை செய்யப்பட்டனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஜெயக்குமார் இறந்த நிலையில் 17 மாதங்களாக மாவட்ட தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரையின் மகன் விபி.துரை என்பவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







