வள்ளியூரிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.எஸ். கே. கிறிஸ்டோபர் வீட்டில் நேற்று (பிப் 8)திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் தவெக தலைமை நிர்வாக உறுப்பினருமான நெல்லை ராஜகோபால் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட இணை செயலாளர் காட்வின் பிரசாத் , வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன் , வள்ளியூர் பேரூர் கழகச் செயலாளர் ராஜா அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பேரூர், கிளை, வார்டு, பூத் நிர்வாகிகள் அனைவரும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.







