வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவுக்கு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக-வின் எழுச்சி மற்றும் வலுவான பிரச்சாரத்தால் சபாநாயகரின் வெற்றிக்கு சவாலான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற/தோற்ற சரித்திரம் உள்ள ராதாபுரம் தொகுதி. இந்த முறை தவெக-வின் இந்த தொகுதியில் வாக்குகளை பிரிப்பது சபாநாயகருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். சபாநாயகர் அப்பாவு, தவெக-வின் இந்த சவாலை எதிர்கொள்ள போகிறார் என்பதை வைத்தே , அவரின் வெற்றி இருக்கிறது.
ஆனால், இந்த முறை வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர். கிறிஸ்டோபர் தவெக தரப்பில் இருந்து ராதாபுரம் தொகுதியை குறி வைத்து இறங்கியுள்ளார். இதனால் , அங்கு கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ''ராதாபுரம் தொகுதியில் குவாரிகளால் அந்த மாவட்டத்தின் கனிம வளங்கள் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதை தடுக்கும் அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் , அப்பாவு கண்டுகொள்ளவில்லை'' என்பதே டாக்டர். கிறிஸ்டோபர் அப்பாவு மீது வைக்கும் குற்றச்சாட்டு.

தனது பிசியான மருத்துவ தொழிலுக்கு இடையே ராதாபுரம் தொகுதியில் டாக்டர். கிறிஸ்டோபர் களப்பணியை தொடங்கி விட்டார். தினமும் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து , பேசி வருகிறார். எளிமையான அவரின் அணுகுமுறை, வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் தலைமுறையினர் மற்றும் தவெகவினரின் எழுச்சி இந்த தொகுதியில் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், அப்பாவுக்கு இந்த முறை எளிதாக வெற்றி கிடைத்து விடாது என்றே தெரிகிறது.

இது குறித்து டாக்டர். கிறிஸ்டோபரிடத்தில் பேசிய போது, ''எங்கள் கட்சிக்கு கூட்டணி இருந்தாலும் சரி ...இல்லையென்றாலும் சரி,கண்டிப்பாக அப்பாவுவை தோற்கடிப்பேன். இந்ததொகுதி மக்களுக்கு அவர் அவ்வளவு துரோகம் இழைத்துள்ளார் '' என்று கூறுகிறார்.







