ராதாபுரத்தை மொட்டையடித்த அப்பாவு- கனிமவள கொள்ளையை கையில் எடுக்கும் டாக்டர். கிறிஸ்டோபர்

appavu-will-face-tvk-Dr-Christopher-in-radhapuram

சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவின் தொகுதியான ராதாபுரத்தில் மீண்டும் அவருக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு அவரது இடத்தைப் பிடிக்க திமுக-வுக்குள் பலரும் கச்சைகட்டி களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இருந்து திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அதன்படி வள்ளியூரில் திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போது, ராதாபுரம் தொகுதி நிலவரம் திமுக-வுக்குச் சாதகமாக இல்லை என சபரீசன் வெளிப்படையாகச் சொன்னதாக ஒரு தகவல் சொல்கிறார்கள்.

ராதாபுரம் தொகுதிக்குள் இருக்கும் கல்குவாரிகளில் வரம்பு மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, தவெக கட்சியின் திருநெல்வேலி மாவட்ட மருத்துவ பிரவு தலைவரான டாக்டர். கிறிஸ்டோபர் இந்த குற்றச்சாட்டை அப்பாவு மீது வைத்துள்ளார். மேலும், த.வெ.க தரப்பில் வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர். கிறிஸ்டோபர் ராதாபுரம் தரப்பில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது. சீட் அறிவிக்கும் முன்னரே, டாக்டர் . கிறிஸ்டோபர் பணகுடி, வள்ளியூர், ராதாபுரம் , பரமேஸ்வரபுரம் , காவல்கிணறு பகுதிகளில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, இந்த கனிமவளக் கொள்ளை விவகாரத்தை பற்றி மக்களுக்கு டாக்டர். கிறிஸ்டோபர் விளக்கமாக எடுத்து கூறி வருகிறார்.

ராதாபுரத்தில் திமுக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள். அப்படியே, அப்பாவுக்கு மீண்டும் சீட் கிடைத்தாலும் த.வெ.க இந்த தொகுதியில் கடும் போட்டியை அளிக்கும். டாக்டர். கிறிஸ்டோபருக்கு சீட் கிடைக்கும்பட்சத்தில்' நான் நிச்சயமாக அப்பாவுவை தோற்கடித்து காட்டுவேன் 'என்று கூறுகிறார். இதனால், ராதாபுரம் தொகுதி திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றே பரவலாக சொல்கிறார்கள்.

READ MORE ABOUT :