தமிழக வெற்றி கழக திருநெல்வேலி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகியுமான டாக்டர் .கிறிஸ்டோபர் ராதாபுரம் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ராஜகிருஷ்ணாபுரம் ,இடிந்தகரை, பரமேஷ்வபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை தீர விசாரித்தார். மக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.
வள்ளியூரில் நேற்று நடைபெற்ற ராதாபுர சட்டமன்ற தொகுதி உட்பட்ட கழக நிர்வாகிகளுக்கான கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக கட்சியின் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் டாக்டர். மரிய வில்சன் பங்கேற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி டாக்டர் . கிறிஸ்டோபர் வரவேற்றார்.
தனது வெற்றி வாய்ப்பு டாக்டர். கிறிஸ்டோபர் கூறுகையில், ''இந்த தொகுதியில் அப்பாவு எந்தவிதமான நலத்திட்ட பணிகளையும் செய்யவில்லை. மக்களை நான் சந்தித்த போது, தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் இருப்பதை கண்டு தீர்வு எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த தேர்தலில் நான் போட்டியிட்டு நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்கிறார்.







