தமிழக வெற்றி கழக திருநெல்வேலி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகி வள்ளியூரை சேர்ந்த டாக்டர். கிறிஸ்டோபர் திசையன்விளை, வள்ளியூர் , அம்மச்சி கோவில் , கூடன்குளம், பணகுடி பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து மக்களின் குறைகளை தீர விசாரித்தார். அப்போது, மக்கள் தாங்கள் படும் அவஸ்தைகள் பற்றி அவரிடத்தில் எடுத்துரைத்தனர்.
விரைவில், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுமென்று அவர் மக்களுக்கு உறுதியளித்தார். ராதாபுரம் தொகுதியில், சபாநாயகர் அப்பாவு எம்.எல்.ஏவாக இருந்தும் மக்கள் பிரச்னைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் டாக்டர். கிறிஸ்டோபரிடத்தில் வேதனை தெரிவித்தனர். அப்போது, இந்த தொகுதியில் த.வெ.க கைப்பற்றும். சபாநாயகர் அப்பாவுவை கண்டிப்பாக த.வெ.க தோற்கடிக்கும். அப்போது, உங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு நிச்சயம் காணப்படும் என்று டாக்டர். கிறிஸ்டோபர் உறுதியளித்தார்.







