அப்பாவுக்கு போட்டியாக ராதாபுரம் தொகுதியில் த.வெ. சார்பில் இளம் டாக்டர்!

Young-doctor-from-T-V-k-contests-against-appavu-in-Radhapuram-constituency

தமிழகத்தில் சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் களம் காண்கிறார். கடந்த 2021 தேர்தலில் தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரை தோல்வியடைந்தார். இந்த முறை, ராதாபுரத்தில் அப்பாவுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த முறை , அதிமுக தரப்பில் பாரதிய ஜனதா கட்சிக்கு ராதாபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ராதாபுரம் தவெக வேட்பாளராக டாக்டர். கிறிஸ்டோபர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னரே, ராதாபுரம் தொகுதியில் சந்து பொந்தாக புகுந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால், மக்கள் மத்தியில் பிரபலமாகியும் விட்டார்.

இலவச மருத்துவமுகாம் நடத்துவது, மக்களின் குறைகளை கேட்டறிந்து ,உடனடியாகஅதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க விலியுறுத்துவது என்று தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் டாக்டர். கிறிஸ்டோபர் ஈடுபட்டு வந்தார்.இவரது அயராத உழைப்பைக் கண்ட த.வெ.க தலைமையும் அவருக்கு ராதாபுரத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது . இவர், ராதாபுரத்தில் அப்பாவுக்கு கடும் போட்டியாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

READ MORE ABOUT :