பேச்சிபாறை அணையில் இருந்து ராதாபுரம் குளங்களுக்கு தண்ணீர்..|உறுதியளித்த தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர்

This-is-the-main-problem-in-Radhapuram-constituency-Assured-TVK-Satish-Christopher

நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசெல்வியிடம் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து மனுவை வழங்கினார்.

மனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் கிறிஸ்டோபர், தொகுதியின் முக்கியப் பிரச்சினையான நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பேச்சிப்பறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய் மூலம் 52 குளங்களுக்கும் முறையாகத் தண்ணீர் கொண்டு வந்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், மருத்துவர் என்பதால் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் சதீஷ் கிறிஸ்டோபர் வாக்குறுதி அளித்தார்.