அமெரிக்க டிவி போட்டியில் ரூ.70 லட்சம் வென்ற இந்திய மாணவன்

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட குவிஸ் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவன் ஒருவன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.70 லட்சம்) வென்றுள்ளார்.

அமெரிக்காவில் பிரபல டி.வி. சேனலில் அரசியல், பொது அறிவு குறித்த குவிஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். ‘2019 டீன் ஜியோபார்டி’ என்ற தலைப்பிலான இந்த குவிஸ் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவிகுப்தா என்ற மேல்நிலைப் பள்ளி மாணவர் பங்கேற்றார். ஒரேகான் போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் இந்த மாணவர், போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். இவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய்.

இவருக்கு அடுத்து 2 வது பரிசாக 50 ஆயிரம் அமெரிக்க டாலர் வென்ற ரேயான் பிரஸ்லர், 3வது பரிசாக 25 ஆயிரம் டாலர் வென்ற லூகாஸ் மினார் ஆகியோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள்தான்.

அவிகுப்தாவின் தாய் நந்திதா குப்தா கூறுகையில், ‘‘அவி வெற்றி பெற்றதும் எனது இதயம் நூறு மைல் வேகத்தில் துடித்தது. அவன் மிகவும் கடினமாக உழைத்து படித்தான். அவனுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்’’ என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Pakistan-media-misleads-International-court-judgement-in-Jadhav-case
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள்
Will-grant-consular-access-to-Kulbhushan-Jadhav-according-to-our-laws-Pakistan
குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
13-feared-dead-in-suspected-fire-at-Japan-film-studio
அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி; ஜப்பானில் பயங்கரம்
Pakistan-lifts-ban-on-indian-passenger-flights-and-opens-airspace
140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி
no-confidence-motion-against-srilanka-government-defeated-in-parliment
நம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது
Good-news-for-IT-professionals-US-House-removes-country-cap-on-Green-Cards
7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம்; அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்!
Donald-Trump-calls-British-Ambassador-very-stupid-as-diplomatic-spat-escalates
பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம்; கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்
Pakistan-news-anchor-shot-dead
துப்பாக்கியால் சுட்டு செய்தி வாசிப்பாளர் கொலை; பாகிஸ்தானில் பயங்கரம்
LosAngels-earthquake-America-SouthCalifornia-July4
குலுங்கியது தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ்!
srilanka-President-srisena-determined-to-implement-death-penalty
போதைக் கடத்தலுக்கு மரண தண்டனை: சிறிசேனாவுக்கு ரணில் எதிர்ப்பு
Tag Clouds