கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட யுஏஇ சுகாதாரத்துறை அமைச்சர்

Uae health minister receives first dose of vivid 19 vaccine

by Nishanth, Sep 19, 2020, 20:30 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் உவைஸ் போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் அமீரகத்தில் சோதனை நடத்தப்பட்ட முதல் தடுப்பூசி அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அப்துல் ரகுமான் பின் முகமது அல் உவைசுக்கு போடப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள சுகாதார துறை ஊழியர்களின் பாதுகாப்புக்காகவே இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அபுதாபியில் நடந்து வரும் மூன்றாவது கட்ட தடுப்பூசி ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளது என்று கூறினார்.

You'r reading கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட யுஏஇ சுகாதாரத்துறை அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை