
தென்கொரியாவில் நடந்து வரும் ஆசிய தடகளப்போட்டியில் பங்கேற்க சென்ற 3 ஈரான் நாட்டை சேர்ந்த வீரர், பயிற்சியாளர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகளப் போட்டி நடந்து வருகிறது. இங்குள்ள ஹோட்டலில் பயிற்சியாளர்கள் , வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த சமயத்தில் பார் ஒன்றில் வீரர் ஒருவரை 20 வயது இளம் பெண் சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில் மற்றொரு வீரரும் ஒரு பயிற்சியாளரும் அந்த அறைக்கு சென்றுள்ளார். இதை, அந்த பெண் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து, கழிவறைக்கு சென்ற அந்த பெண் அங்கிருந்து போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்த பொதுமக்களும் ஹோட்டல் முன்பு கூடி விட்டனர். இதனால், பலத்த பாதுகாப்புடன் ஈரான் நாட்டை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.