நாம முஸ்லிம் நாடுகள்- ஐஸ் வைத்த பாகிஸ்தானுக்கு மலேசியா கொடுத்த நோஸ்கட்

We-are-Muslim-countries-Malaysia-s-nostrum-to-Pakistan-for-putting-ice

பஹால்காமில் தீவிரவாதிகள் இந்தியர்களை கொன்றதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா விமானத்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கி கூற, இந்திய எம்.பிக்கள் அடங்கிய குழுவினர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். அந்த வகையில் , ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். இஸ்லாமிய நாடான மலேசியாவிடத்தில், பாகிஸ்தான் தூதரகம், நாம் இருவரும் முஸ்லிம் நாடுகள். எனவே, இந்திய எம்.பிக்கள் குழுவை உங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று மதத்தை சுட்டி காட்டி பேசியுள்ளது. ஆனால், மலேசியா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய எம்பிக்களை மலேசியாவுக்கு அனுமதித்ததோடு, 10 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அனுமதியளித்துள்ளது.