24,000 அடி உயரத்தில் பறந்த விமானம்... பெயர்ந்த மேற்கூரை... பயணிகள் நிலை என்ன ஆனது?

how-a-plane-landed-safely-after-losing-its-roof-mid-flight

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 265 பேர் இறந்து போனார்கள். இந்தியா முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்ந நிலையில், ஒரு விமானம் மேற்கூரை பெயர்ந்த நிலையில்,பத்திரமாக தரையிறங்கிய சம்பவமும் இந்த உலகத்தில் நடந்துள்ளது. விமானப் பயண வரலாற்றில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்திய அந்த சம்பவம் எப்போது நடந்தது எங்கே நடந்தது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஹவாய் நாட்டிலுள்ள ஹிலோ என்ற நகரத்தில் இருந்து மதியம் 1. 25 மணிக்கு அந்த நாட்டு தலைநரான ஹோனலுவுக்கு அலஹா ஏர்லைன்சின் போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 88 பயணிகள் 6 சிப்பந்திகள் இருந்தனர். சுமார் 40 நிமிடங்கள்தான் விமானம் பயணிக்க வேண்டும். விமானத்தில் ஏறிய போதே பயணி ஒருவர் விமானத்தில் ஜன்னல் அருகே கோடு போன்ற பிளவு இருப்பதை கண்டார். எனினும், அவர் அது பற்றி யாரிடமும் கூறவில்லை. இதுதான் இங்கே தவறாகி விட்டது.110 சீட்டுகள் கொண்ட இந்த இரட்டை இன்ஜீன் விமானம் டேப் ஆப் ஆன 20 நிமிடத்தில் 24 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போதுதான், அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது, விமானத்தின் கூரையின் பெரும் பகுதி திடீரென பெயர்ந்து விழுந்து விட்டது.

விமான பயணத்தின் வரலாற்றில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்தது இதுவே முதன்முறை. இதனால் , விமானம் கேபின் பிரஷ்ஷரை இழந்தது. உள்ளேயிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். காற்றினால் அலைக்கழிக்கப்பட்டனர். பெரும்பாலானார் சீட் பெல்ட்டுகளை போட்டிருந்ததால் பறக்காமல் தப்பித்தனர். அதே வேளையில், பயணிகளுக்கு ஒயின் வழங்கிக் கொண்டிருந்த விமானப்பணிப் பெண்ணான Clarabelle என்பவர் மட்டும் விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பசிபிக் கடலில் விழுந்தார். இத்தகைய கடினமான சூழலிலும் விமானத்தினுள் இருந்த பயணிகளுக்கு ஆக்சிஜன் சீராக கிடைக்க ஆக்சிஜன் மாஸ்க்குகளை சிப்பந்திகள் கொடுத்தனர்.

நல்ல வேளையாக ஆக்சிஜன் மாஸ்க் சிஸ்டம் வேலை செய்தது. இதனால், பயணிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு உருவானது. இல்லையென்றால் பயணிகள் ஹைபோக்சியா பாதிப்பால் உடனடியாக பயணிகள் இறந்து போக வாய்ப்பு உண்டு. இந்த ஹைபோக்சியா ஏற்பட்டால் பயணிகள் 2 நிமிடங்ளுக்குள் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போவார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால், இந்த சம்பவத்தில் நல்லவேளையாக பைலட்டுகள் இருவரும் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இதனால், விமானத்தை அவர்கள் இயக்கிக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பைலட்டுகள் இருக்கும் காக்பிட் அறை ஒரு மீட்டருக்கு வளைந்து போய் விட்டது. இந்த சூழலிலும் விமானிகள் பாடுபட்டு விமானத்தை 24 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்துக்கு ஒரு நிமிட நேரத்துக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், இப்போது விமானத்தை தரையிறக்க வேண்டிய மிகப் பெரிய சவால் விமானிகளுக்கு காத்திருந்தது. விமானத்தை அருகிலுள்ள Kahului விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்து அந்த விமான நிலையத்தில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். உடனடியாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த விமான நிலையத்தை அடைய சில நிமிட நேரம் இருந்தது. ரன்வே தென்பட்டதும் விமானி லேண்டிங் கியரை இயக்கினார். அப்போது, மத்திய பகுதியிலுள்ள மெயின் கியர் பின் பகுதியிலுள்ள லெப்ட் கியர் சரியாக செயல்பட மூக்கு பகுதியிலுள்ள லேண்டிங் கியர் மட்டும் சரியாக இயங்கவில்லை. திரும்பி காணப்பட்டது. இதனால், விமானிகளிடத்தில் இன்னும் பதற்றம் தொற்றிக் கொண்டது. விமானத்தின் கூரை பகுதி உடைந்திருப்பதால் விமானத்தின் மூக்கு பகுதி இல்லாமல் பெல்லி லேண்டிங் செய்வதும் கடினமான விஷயம் ஆகும். எரிபொருளும் நிறைய இருப்பதால் விமானம் வெடித்து சிதறும் வாய்ப்பும் அதிகம். இதனால், ரன்வேயை நெருங்க நெருங்க பயணிகளிடத்தில் பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது . ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினர். இதற்கிஇயே, Kahului விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை பைனார்குலர் வழியாக தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, விமானத்தில் நோஸ் பகுதியிலுள்ள லேண்டிங் கியர் சரியாக இறங்கியிருப்பதை ஒருவர் கண்டார். உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் பெல்லி லேண்ட் செய்யப்படாமல் நர்மாலாகவே தரையிறங்கியது. அதாவது, மதியம் 1.58 மணிக்கு விமானம் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 94 பேரும் உயிர் பிழத்தனர். சிலருக்கு கழுத்து, கால், கைகள் மட்டும் உடைந்திருந்தன. எனினும், உயிர் பிழைத்தது தம்பிராண் புண்ணியம் என்கிற கதையாக பயணிகள் தங்களை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர்.

இத்தகைய இக்கட்டான சூழலில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி Robertக்கு பயணிகள் மனமார நன்றி தெரிவித்தனர். கூரை உடைந்த பிறகு, கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் 48 விநாடிகள் விமானம் வானத்தில் தவித்தது. இந்த விமான விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியது சீட் பெல்ட்டுதான். விமானம் 24 ஆயிரம் அடியை எட்டிய பிறகும் குறுகிய நேர பயணம் என்ற காரணத்தினால் சீட் பெல்ட்டுகளை பயணிகள் கழற்றியிருக்கவில்லை. இதனால்தான் விமானத்தின் கூரை பெயர்ந்த போது பல பயணிகள் பறக்காமல் தப்பித்தனர். மிகவும் பழைய விமானமான இது கிட்டத்தட்ட 35 ஆயிரத்து 496 மணி நேரம் பறந்துள்ளது.

அதாவது, பறக்க வேண்டிய மணி நேரத்தை விட இரு மடங்கு அதிகமாக பறந்துள்ளது. இத்தகைய பழைய விமானத்தை மீண்டும் மீண்டும் அலஹா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயன்படுத்தி வந்ததே விபத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த விபத்தில் இறந்தவர் விமானப்பணிப் பெண்ணான Clarabelle என்பவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது, உடல் கடைசி வரை கிடக்கவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.