இப்படியும் விமான விபத்து நடந்துள்ளது... ஆனால், ஒரு உயிர் போகலையே!

The-story-of-Flight-and-Captain-Sully-s-life-saving-Hudson-water-landing

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி உலகமே அதிர்ந்த அந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் விமானத்துறை வரலாற்றில் ஒரு கேப்டன் நடத்திய சாகசமாகவே பார்க்கப்படுகிறது.

நியூயார்க் லாகார்டா விமான நிலையத்தில் இருந்து யு.எஸ் . ஏர்லைன்ஸ் விமானம் பறக்க தொடங்கியது. பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் இன்ஜீன்கள் சக்தியை இழந்து விட்டன. உடனடியாக, தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை சொன்ன விமான கேப்டன் சல்லென்பெர்கர் சற்று யோசித்தார்.

உடனடியாக, கீழே ஓடிக் கொண்டிருந்த குளிர் நிறைந்த ஹூட்சன் நதியில் சற்றும் யோசிக்காமல் விமானத்தை இறக்கி விட்டார். இதனால், விமானத்தில் இருந்த 155 பேரும் உயிர் பிழைத்தனர். கேப்டன் சல்லென் பெர்கருக்கு பாராட்டு குவிந்தது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டு சல்லி என்ற பெயரில் ஹாலிவுட் படமும் வெளி வந்தது.